அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதுமட்டுமின்றி தமிழகம் மற்றும் கேரளா பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த ஒரு சில மணி நேரத்திற்கான மழை விவரங்களையும் தொடர்ந்து மக்களுக்குத் தெரியப்படுத்தி வருகிறது.
அதன்படி, அடுத்த 3 மணி நேரத்தில் விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், ராமநாதபுரம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், செய்யூர், பூவிருந்தவல்லி பகுதிகளில் அடுத்த 2 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மோனிஷா
தொடரும் கனமழை : எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?
படமாகும் இந்தியாவின் முதல் பெண் உளவாளியின் கதை!