கனமழை: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

தமிழகம்

கனமழை காரணமாக நாளை (நவம்பர் 1) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.

நவம்பர் 2 எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?

முக்கியமாக நாளை (நவம்பர் 1) திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் ஆகிய 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல் ஆகிய 15 மாவட்டங்கள்,

மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் அது தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, நவம்பர் 4ஆம் தேதி வரை தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அது எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை (நவம்பர் 1) மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்ததை அடுத்து, அம்மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.

ஜெ.பிரகாஷ்

குஜராத் பாலம் விபத்து: 9 பேர் கைது!

சிறைத் துறை டிஜிபியாக அம்ரேஷ் பூஜாரி நியமனம்!

+1
2
+1
3
+1
3
+1
1
+1
0
+1
1
+1
2

Leave a Reply

Your email address will not be published.