கனமழை : மாணவர்களுக்கு அரைநாள் விடுப்பு!

கனமழை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி 4 மாவட்ட பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல், மாமல்லபுரத்திற்கு அருகே கடந்த 10ஆம் தேதி கரையை கடந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்தது.

இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.
எனவே சூழ்நிலைக்கு ஏற்ப அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து வருகின்றனர்.

அந்தவகையில் சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று அரை நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

வேலூரில் அனைத்து பள்ளிகளும் மாலை 3 மணிக்கு வகுப்புகளை முடித்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

கனமழை தொடர்வதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று அரை நாள் விடுமுறை அளித்து ஆட்சியர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று அரை நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அறிவித்துள்ளார்.

பிரியா

ஜிவி பிரகாஷுடன் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts