heavy rain forecast

17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகம்

தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவையிலும் நேற்று(அக்டோபர்) மழை பெய்தது.

சென்னையைப் பொறுத்தவரை இன்று(அக்டோபர் 3) மதியம் வரை வெப்பம் அதிகமாக இருந்த நிலையில் தற்போது மழை பெய்து வருவதால், குளிர்ந்த வானிலை நிலவுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரியில் ஆங்காங்கே 9 செ.மீ, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் 5 செ.மீ., திருப்பூர் வெள்ளக்கோயில், வேலூர் குடியாத்தம் கன்னியாகுமரி கொட்டாரம் ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ மழைப் பதிவானது.

இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று(அட்கோபர் 3) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 “03.10.2024:  கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

04.10.2024 : புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்குச் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்

03.10.2024 மற்றும் 04.10.2024: மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்

03.10.2024: மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இதனால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

தோனிக்கு சி.எஸ்.கே பெருமை… ரோஹித்துக்கு சிறுமை செய்யும் மும்பை!

ரயில் படிக்கட்டில் பயணம்: இளைஞர் உயிரிழந்த சோகம்!

திமுக ஆட்சி : மூன்று ஆண்டுகளில் 46 புதிய தொழிற்சாலைகள்… 1.39 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *