72 ஆண்டுகளில் மூன்றாவது முறையாகக் கனமழை!

தமிழகம்

கடந்த 72 ஆண்டுகளில் நவம்பர் 1 தேதி சென்னையில் கனமழை பதிவாவது ( 80 .4 மி மீ ) இன்று மூன்றாவது முறை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த இரு நாட்களாக பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. வேளச்சேரி, திருவான்மியூர், மயிலாப்பூர், சேப்பாக்கம், கிண்டி, நுங்கம்பாக்கம், சோழிங்கநல்லூர்,திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், காலை 11:07 மணியளவில் மழை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம்,

அரக்கோணம்,மயிலாப்பூர்,சோழிங்கநல்லூர்,திருப்போரூர், உத்திரமேரூர், வேளச்சேரி பகுதிகளிலும், கிண்டி,பொன்னேரி,உத்துக்கோட்டை,வாலாஜாபேட்டை பகுதிகளிலும், அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

அதுபோன்று 11:37 மணியளவில் வெளியிட்ட அறிவிப்பில், அடுத்த 2 மணி நேரத்துக்கு திருக்கழுகுன்றம்,திருவள்ளூர் பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

11:57 மணியளவில் வெளியிட்ட அறிவிப்பில், அடுத்த 2 மணி நேரத்திற்குள்ளாக கும்மிடிப்பூண்டி பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது .

12:08 நிலவரப்படி அடுத்த 2 மணி நேரத்திற்குள்ளாக பல்லாவரம், அமைந்தக்கரை, அயனாவரம், எழும்பூர், குன்றத்தூர், மதுரவாயல், மாம்பலம், பெரம்பூர், பூவிருந்தவல்லி, பொன்னேரி, புரசைவாக்கம், ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, ஊத்துக்கோட்டை, வண்டலூர், அம்பத்தூர், மாதவரம் ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது

மேலும், கடந்த 72 ஆண்டுகளில் நவம்பர் 1 தேதி சென்னையில் ( நுங்கம்பாக்கம்) கனமழை பதிவாவது ( 80 .4 மி மீ ) இன்று மூன்றாவது முறை என்று கூறியுள்ளது.

பிரியா

போட்டோ சூட் நடத்தவே மருத்துவமனைக்கு மோடி விசிட்: காங்கிரஸ், ஆம் ஆத்மி கடும் தாக்கு!

தங்கம் விலை சரிவு, வெள்ளி விலை உயர்வு!

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *