வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், டெல்டா மாவட்டங்கள் உட்பட 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகப் பகுதிகளுக்கு மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
மேலும் தமிழகம் மற்றும் கேரளா பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கித் தீவிரமடைந்து வருகிறது.
அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், நீலகிரி, கரூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை தெரிவித்துள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஏற்கனவே மழை பெய்து வரும் நிலையில் மேலும் இடி மின்னலுடன் மழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட கடலோர மாவட்டங்களைப் பொறுத்தவரைச் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு செய்யூர் பகுதியில் லேசான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மோனிஷா
சர்தார் இயக்குநருக்கு தயாரிப்பாளரின் சர்ப்ரைஸ்!
கனமழை : எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?