தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் வரும் 27 ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஆகஸ்ட் 21) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை (ஆகஸ்ட் 22) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
24 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இன்று மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம்.”என்று கூறப்பட்டுளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
”ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதி இல்லை” – தமிழ்நாடு அரசு திட்டவட்டம்!
குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!
வேலைவாய்ப்பு: டிஜிசிஏ- வில் பணி!
”புரட்சிக்கான மரியாதையே போய்டுச்சி”: எடப்பாடி பட்டம் குறித்து டிடிவி