எந்தெந்த மாவட்டங்களில் கனமழை ?

தமிழகம்

தமிழகத்தில் இன்று (அக்டோபர் 13) முதல் அடுத்த 5 நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (அக்டோபர் 13) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

அக்டோபர் 13 ஆம் தேதியான இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சிராப்பள்ளி,

டெல்டா மாவட்டங்கள் (தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால்) புதுக்கோட்டை மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

heavy rain for 5 days in tamilnadu including delta districts

அக்டோபர் 14 ஆம் தேதி, இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்,

அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கடலூர், மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக்டோபர் 15 ஆம் தேதி தென் தமிழக மாவட்டம் மற்றும் வட உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக்டோபர் 16 மற்றும் 17 ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் வானிலை நிலவரம்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

heavy rain for 5 days in tamilnadu including delta districts

அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

மேற்கண்ட நாட்களில் அக்டோபர் 13 ஆம் தேதியைத் தவிர இதர நாட்களில் மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை.

heavy rain for 5 days in tamilnadu including delta districts

அக்டோபர் 13 ஆம் தேதியான இன்று குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

ஆகையால் இன்று மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

மோனிஷா

”சென்னை ஒரு நகரம்” : பற்ற வைத்த சாரு

தங்கம் விலை உயர்வு : வெள்ளி விலை சரிவு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0