சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
காலை 6.15 மணிக்கு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னை விமான நிலையம் அமைந்துள்ள மீனம்பாக்கம் பகுதியில் அதிகபட்சமாக 137.6 மிமீ மழை பெய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. கடந்த 1996 ஜூன் 14 அன்று அதிகபட்சமாக 282.2 மி.மீ மழை பெய்தது. அதன் பிறகு இந்த ஜூன் மாதத்தில் தான் அதிக மழை பெய்துள்ளது.
இந்நிலையில் கனமழையாலும், மோசமான வானிலையாலும் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமானம் வருகை மற்றும் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
Ek-542-துபாய், AI-906-துபாய்,FZ-447-துபாய், QR-528-தோகா, EY-268-அபுதாபி, BA-35-லண்டன், G9-471-சார்ஜா, AI-274-கொழும்பு, 6E1002-சிங்கப்பூர், 6E-1278-மஸ்கத் ஆகிய விமானங்கள் பெங்களூருவுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன.
அதேபோன்று கனமழையால் சென்னையிலிருந்து அந்தமான், பிராங்க்பார்ட், துபாய், லண்டன் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல வேண்டிய 17 பன்னாட்டு விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டு சென்றன.
பிரியா
ஓடும் ரயிலில் ராகுல் காந்தியின் பிறந்தநாள் கொண்டாட்டம்!
கலைஞர் கோட்டம் திறப்பு விழா: திருவாரூரில் மு.க.ஸ்டாலின்!