கன மழை: எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

தமிழகம்

கன மழை காரணமாக இன்று (பிப்ரவரி 3) திருவாரூர், காரைக்கால், தஞ்சாவூர், நாகை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வங்ககடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நேற்று அதிகாலை இலங்கை – திரிகோணமலைக்கு இடையே கரையை கடந்தது. இது மேலும் தென் மேற்கு திசையில் நகர்ந்து குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்று நிலவக்கூடும்.

இதனால் இன்று தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும் வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கன முதல் மிக கன மழையும், கன்னியாகுமரி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கன மழை காரணமாக திருவாரூர், காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கும், நாகை மாவட்டத்தில் 1 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

செல்வம்

ஜல்லிக்கட்டுக்கு தடை? : காவல்துறை எச்சரிக்கை!

குடியால் தம்பி கொலை, பணிமனை அமைக்க கூட இடமில்லை: குமுறும் ’நாம் தமிழர்’ வேட்பாளர்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.