சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று (டிசம்பர் 22) அதிகாலையில் பெய்த கடும் பனிப்பொழிவால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் முதல் பெய்து வருகிறது. இருப்பினும் இந்த வருடம் போதிய மழை பெய்யாததால் பனியின் தாக்கம் சற்று அதிகமாக உள்ளது.
மார்கழி மாதம் துவங்கி சில நாட்களே ஆன நிலையில் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
இந்தநிலையில், இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. குறிப்பாக அண்ணாசாலை, தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பனிப்பொழிவால் சாலைகள் புகை சூழ்ந்தது போல காட்சியளித்ததது. இதனால் வாகன ஓட்டிகள் மெதுவாக சென்றனர்.
தெற்கு வங்ககடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.
இதனால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை மற்றும் பனிப்பொழிவின் தாக்கத்தால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
செல்வம்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
அவருக்கு மரியாதை கொடுங்கள்: ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த அப்ரிடி