சென்னையில் கடும் பனி மூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி!

Published On:

| By Jegadeesh

சென்னையில் கடும் குளிர், பனிப்பொழிவு நிலவி வருவதால் அதிகாலையில் வாகன ஒட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

மார்கழி மாதம் பொதுவாக பனிப்பொழிவு இருப்பது வழக்கமான ஒன்று என்றாலும் மார்கழி மாதம் முடிவடைந்து இன்றுடன் தை மாதமும் முடிவடைய உள்ள நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு நீடித்து வருகிறது.

அந்த வகையில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது.

கோயம்பேடு , அண்ணாநகர், சைதாப்பேட்டை , கிண்டி , மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பனிப்பொழிவு காணப்படுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டு பயணம் செய்கின்றனர்.

இதனிடையே இன்னும் சில நாட்கள் பனிப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

தமிழ் என்பேனா! அது தமிழன் பேனா!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share