மக்களே உஷார் : வெப்பம் அதிகரிக்கும்… வானிலை எச்சரிக்கை!

Published On:

| By Kavi

heat will increase in tamilnadu

தமிழகத்தில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. heat will increase in tamilnadu

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விலகிக் கொண்ட நிலையில், கடந்த சில தினங்களாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது.

அதிகபட்சமாக கரூர் பரமத்தி வேலூரில், 34.8 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது.

குறைந்தபட்சமாக சேலத்தில் 16.4 டிகிரி செல்சியல் வெயில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இன்று (பிப்ரவரி 7) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (8-2-2025) முதல் வரும் 13ஆம் தேதி வரை பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை heat will increase in tamilnadu

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என்று கூறியுள்ளது. heat will increase in tamilnadu

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share