தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 3 முதல் 5 டிகிரி வரை அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (மே 1) தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த 5 நாட்களுக்கு இந்தியா வெப்ப நிலை அதிகரிப்பு உறுதியாகியுள்ளது.
இதுகுறித்த வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பில்,”கங்கை நதியை ஒட்டியுள்ள மேற்குவங்கம், ஒடிசா, பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலத்தில் மே மாதம் 2ம் தேதி வரை கடுமையான வெப்ப அலை நீடிக்கும். இம்மாநிலங்களில் அதிக வெப்பத்திற்கான சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
தென்னிந்தியாவில் உள்ள ராயலசீமா, சௌராஷ்டிரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, கடலோர ஆந்திரப்பகுதி, ஏனாம், கொங்கன், தமிழ்நாடு பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம், ஈரப்பதத்துடன் கூடிய வெப்ப அலை நிலவக்கூடும்.
வடமேற்கு இந்தியாவை பொறுத்தமட்டில், அங்குள்ள மாநிலங்களில் வெப்பநிலை 2 டிகிரி முதல் 3 டிகிரி வரை அடுத்த 2 நாட்களுக்கு குறையலாம்.
எனினும், அடுத்த 5 நாட்களில் மத்திய இந்தியாவில் உள்ள மாநிலங்களில் 2 டிகிரி முதல் 3 டிகிரி வரை வெப்பநிலை உயரும்” என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
குவாரியில் வெடி விபத்து… 3 பேர் உடல் சிதறி பலி : மாவட்ட ஆட்சியர் உத்தரவு!