தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்தாலும், பெரும்பாலான இடங்களில் வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. சென்னை உள்ளிட்ட எட்டு இடங்களில் வெப்ப நிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரையில் 104.36 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, கடலூர், ஈரோடு, கரூர், பரமத்திவேலூர், பாளையங்கோட்டை, தூத்துக்குடி, வேலூர் உள்ளிட்ட 10 இடங்களில் நேற்ற் (ஜூலை 3) 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெப்பம் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், “அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது வெப்ப அழுத்தம் (Heat Stress) காரணமாக இந்த நிலை ஏற்படுகிறது. ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி முதல் 104 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும்.
ஆனால், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) வரை ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என்று சென்னை வானிலை ஆய்வு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு மீது தீர்ப்பு முதல் இந்திய அணி வீரர்கள் பேரணி வரை!
கிச்சன் கீர்த்தனா : இறால் தொக்கு தோசை
டிஜிட்டல் திண்ணை: நெல்லை, கோவை… இரண்டு மேயர்கள் மட்டும்தானா? தொடரும் ஹிட் லிஸ்ட்!