திடீர் விருந்தினரின் வருகையின்போதும் குழந்தைகள் பசியெடுக்கும் நேரத்தில் சாப்பிட ஏதாவது இருந்தால் கொடுங்களேன் என்று கேட்கும்போதும் வீட்டில் உள்ள புளித்த இட்லி மாவைக்கொண்டு இந்த இன்ஸ்டன்ட் இட்லி மாவு போண்டாவைச் செய்து கொடுத்து அசத்தலாம்.
என்ன தேவை?
இட்லி மாவு – ஒரு கப்
மைதா மாவு – கால் கப்
வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – 2
சமையல் சோடா – ஒரு சிட்டிகை
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். இட்லி மாவுடன் மைதா மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், சமையல் சோடா சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, மாவைக் கையால் கிள்ளிப்போடவும். நன்கு வேகவிட்டு எடுக்கவும்.
சுதந்திர தினவிழா ஒத்திகை: சென்னையில் போக்குவரத்து வழித் தடங்கள் மாற்றம்!