கோவாவின் பிரத்யேக உணவு இந்த சிக்கன் ஸக்யூட்டி. இந்த உணவை நீங்களும் உங்கள் வீட்டிலேயே சமைக்க இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
சிக்கன் – 300 கிராம் (சிறிய துண்டுகளாக்கவும்)
மசாலா செய்ய…
மல்லி (தனியா) – ஒரு டேபிள்ஸ்பூன்
அன்னாசி மொட்டு – ஒன்று
பட்டை – சிறிய துண்டு
ஏலக்காய் – 2
ஜாதிபத்ரி – ஒன்று
கசகசா, சீரகம் – ஒரு டீஸ்பூன்
ஜாதிக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்
மிளகு – ஒரு டீஸ்பூன்
கிராம்பு – 3
காய்ந்த மிளகாய் – 10
மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்
பெருஞ்சீரகம், வெந்தயம் – அரை டீஸ்பூன்
கறி செய்ய…
எண்ணெய் – 2/3 டேபிள்ஸ்பூன்
பிரியாணி இலை – 2
ஏலக்காய் – 2
கிராம்பு – ஒன்று
பட்டை – சிறிய துண்டு
அன்னாசி மொட்டு – ஒன்று
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
உப்பு – தேவையான அளவு
ஊறவைத்து அரைக்க…
பச்சை மிளகாய் – 3
கொத்தமல்லித்தழை – கைப்பிடி அளவு
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
அரைக்க…
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
தேங்காய்த் துருவல் – கால் கப்
எப்படிச் செய்வது?
ஊறவைத்து அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சிறிது நேரம் ஊறவைத்து விழுதாக அரைத்து எடுக்கவும்.
இதனுடன் சிக்கன் துண்டுகள் சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்து எடுக்கவும்.
வெறும் வாணலியில் மசாலா செய்யக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து பவுடராக அரைத்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, பட்டை, அன்னாசி மொட்டு சேர்த்து வறுக்கவும். இதனுடன் வெங்காயம் சேர்த்துக் கிளறி, தக்காளி சேர்த்து வதக்கவும். ஊறவைத்த சிக்கன், உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வேகவிடவும்.
பிறகு, 2 – 3 டேபிள்ஸ்பூன் அரைத்த மசாலா பவுடர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேகவிடவும். சிக்கன் வெந்ததும், அரைத்த தேங்காய் – முந்திரி விழுது சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
கிச்சன் கீர்த்தனா: பார்சி சிக்கன் கறி