கிச்சன் கீர்த்தனா  : ஷாஹி முட்டை கறி

தமிழகம்

காலை உணவில் கண்டிப்பாக ஒரு சத்தான ஆகாரம் சேர்ந்திருக்கவேண்டியது அவசியம். தவிர்க்கக் கூடாதது காலை உணவு என்பதை மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். அதற்கு முட்டையைச் சேர்த்துக்கொண்டால் போதும். முட்டையில் ஏ முதல் ஈ வரை ஐந்து வைட்டமின்கள் அடங்கியுள்ளன. மேலும் முட்டை உணவுகள் எளிதில் செய்துவிடக்கூடியவை என்பதால் இந்த ஷாஹி முட்டை கறி செய்து சாப்பிட்டு இன்றைய நாள் முழுக்க புத்துணர்ச்சி பெறலாம்.

என்ன தேவை?
அவித்த முட்டைகள் – 4
நறுக்கிய பூண்டு – ஒரு டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – ஒன்று (நறுக்கவும்)
பச்சை மிளகாய் – ஒன்று
நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
ஃப்ரெஷ் கிரீம் – ஒரு டேபிள்ஸ்பூன்
தயிர் – ஒரு டேபிள்ஸ்பூன்
கஸூரி மேத்தி – ஒரு டீஸ்பூன்  
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன்  
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
புராசஸ்டு சீஸ் (processed cheese) – 2 கியூப்
உப்பு – தேவைக்கேற்ப

எப்படிச் செய்வது?
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சூடாக்கி அதில் இந்த விழுதை நன்கு வதக்கவும். தயிரை நன்றாக அடித்து பாத்திரத்தில் சேர்த்துக்கொள்ளவும். சிறிது நேரம் வதக்கிய பிறகு இதனுடன் கஸூரி மேத்தி, கரம் மசாலாத்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும்.
கால் கப் தண்ணீர் சேர்த்து இந்தக் கலவையை நன்கு கொதிக்கவிடவும். பத்து நிமிடங்கள் கொதித்த பிறகு, அவித்த முட்டைகளை வெட்டி இந்தக் கலவையில் சேர்க்கவும். இதனுடன் சாட் மசாலாத்தூள் சேர்த்து, கொத்தமல்லி இலையும் சேர்த்து நன்கு கிளறவும். ஃப்ரெஷ் க்ரீம் ஊற்றி அலங்கரிக்கவும். சீஸைத் துருவி சேர்க்கவும். ஷாஹி முட்டை கறி தயார்.  

கிரிஸ்பி இறால் வறுவல்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *