உணவு நேரங்களை தவிர சில நேரங்களில் நமக்கு பசி எடுக்கும் போது, பெரும்பாலும் ஊட்டச்சத்துக்கள் அற்ற உணவு பொருட்களை (பேக்கேஜ் ஃபுட்ஸ்) சாப்பிட்டு திருப்தி அடைவோம். பேக் செய்யப்பட்ட உணவுகளை நாம் அதிகமாக சாப்பிட்ட பின் நாம் மந்தமாக உணர்வோம். அதைத் தவிர்க்க உதவும் வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த ரவா முந்திரி
என்ன தேவை?
பொடியாக உள்ள ரவை – 200 கிராம் (ரவை பெரியதாக இருந்தால் மிக்ஸியில் பொடிக்கவும்; மாவாக இருக்கக் கூடாது)
பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன்
வெண்ணெய் – தேவையான அளவு
மைதா மாவு – தலா 50 கிராம்
எண்ணெய் (மாவு பிசைய) – 50 கிராம்
சாட் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – அரை டீஸ்பூன்
எண்ணெய் – பொரிப்பதற்குத் தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
ரவை, மைதா, உப்பு, பேக்கிங் பவுடர், வெண்ணெய் ஆகியவற்றை ஒன்றுசேர்த்துக் கலந்து, இதனுடன் எண்ணெயைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கலக்கவும் (இந்தக் கலவை பிரெட் தூள் போல் வர வேண்டும்; கையில் பிடித்தால் பிடிக்க வர வேண்டும்). கைபொறுக்கும் அளவு சூடான தண்ணீர் எடுத்து இதில் தெளித்து பூரி மாவு பதத்துக்குப் பிசைந்து உருட்டி, ஒரு ஈரத்துணியால் அரை மணி நேரம் மூடி வைக்கவும். மீண்டும் நன்கு 5 நிமிடங்கள் பிசையவும். கையில் சிறிது எண்ணெய் தொட்டுக்கொண்டு இதை நான்கு பாகங்களாகப் பிரித்து, உருட்டி, அரை இன்ச் கனத்துக்கு ரொட்டிகளாகத் தேய்க்கவும். பின் ஏதாவது ஒரு சிறு பாட்டில் மூடியைக் கொண்டு, மூடியின் பாதி அளவுக்கு ரொட்டியில் இருந்து முந்திரிப்பருப்பு மாதிரி வெட்டவும். எண்ணெயைச் சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து வெட்டியவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுப் பொரிக்கவும்.