சின்ன வெங்காயமோ, பெரிய வெங்காயமோ உணவுடன் சேர்ந்து இருப்பதைப் பார்த்தால் சிலர், அதை தட்டின் ஓரத்தில் ஒதுக்கிவைத்துவிட்டு சாப்பிடுவார்கள். ஆனால், அந்த வெங்காயத்தை ஒதுக்கிவைப்பதன் மூலம் நம் உடம்புக்குச் சேர வேண்டிய வைட்டமின், மினரல்ஸ் போன்றவற்றை இழக்கிறோம்.
மேலும், வெங்காயம் இதய கோளாறு, வாய்ப்புண் மற்றும் தலைவலிக்கு நல்ல மருந்தாகும் வெங்காயத்தைச் சாப்பிட மறுப்பவர்களுக்கு இந்த ஆனியன் ஃப்ளவர் செய்து கொடுங்கள். விரும்பி சுவைப்பார்கள். இன்னும் கொஞ்சம் கேட்பார்கள்.
என்ன தேவை?
பெரிய வெங்காயம் – 4
மைதா மாவு – ஒரு கப்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
ஓரிகானோ – ஒரு டீஸ்பூன்
சோளமாவு – அரை கப்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
ஒரு பவுலில் சோள மாவு, உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ரவா தோசை மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவும். மற்றொரு பவுலில் மைதா மாவு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், பூண்டு விழுது, ஓரிகானோ, உப்பு சேர்த்துக் கிளறி வைத்துக்கொள்ளவும்.
வெங்காயத்தின் தோல் நீக்கி, மேலிருந்து கீழாக தொடர்ந்து நறுக்கிக் கொள்ளவும். பார்ப்பதற்கு தாமரை இதழ்கள் பிரிந்து இருப்பது போல இருக்கும்.
இதை தண்ணீர் கலக்காத மைதா மாவுக் கலவையில் போட்டுப் புரட்டி எடுத்து, பின்னர் கரைத்து வைத்திருக்கும் சோள மாவில் முக்கி எடுக்கவும்.
மீண்டும் இதனை தண்ணீர் கலக்காத மைதா மாவில் போட்டு புரட்டி சூடான எண்ணெயில் மெதுவாக சேர்த்து 2 நிமிடம் வேகவிட்டு எடுத்தால், ஆனியன் ஃப்ளவர் ரெடி.
பஃபே பிரியரா நீங்கள்… இதோ உங்களுக்கான டிப்ஸ்!