தென்னிந்தியாவில் உள்ள பெரும்பாலானோர் இல்லங்களில் பொங்கல் பண்டிகையன்று சர்க்கரைப் பொங்கல் கட்டாயம் இடம்பிடித்திருக்கும். ஆனால், இதை விரும்பிச் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். இந்த நிலையில் பொங்கல் அன்று அனைவரும் விரும்பி சாப்பிட வைக்க இந்தப் பால் பொங்கலைப் பொங்கி மகிழலாம்.
என்ன தேவை?
பச்சரிசி – அரை கப்
பால் – முக்கால் கப்
தண்ணீர் – இரண்டரை அல்லது 3 கப்
உப்பு – ஒரு சிட்டிகை
எப்படிச் செய்வது?
பால் மற்றும் தண்ணீரை அடிகனமான பாத்திரத்தில் சேர்த்து, அடுப்பில் வைத்து காய்ச்சவும். அரிசியைக் கழுவி பாலோடு சேர்த்து வேகவிடவும். தீயை மிதமாக்கவும். அரிசி நன்கு மிருதுவாக வெந்ததும், கரண்டியால் நன்கு மசித்துவிடவும். இந்தப் பதத்தில் உப்பைச் சேர்த்து தொடர்ந்து கிளறவும். இல்லையென்றால் அடி பிடித்துவிடும். பிறகு பரிமாறினால் சுவை அள்ளும்.