கிச்சன் கீர்த்தனா : ஆலு – மஷ்ரூம் கறி

தமிழகம்

பார்த்தவுடனே ருசிக்கத் தூண்டும் சுவையும் ஏராளமான சத்துகளும் நிறைந்த ஹெல்த்தி உணவு வரிசையில் இந்த ஆலு – மஷ்ரூம் கறிக்குத் தனியிடம் உண்டு. எளிதாகச் செய்யக்கூடிய இந்த கரி, சப்பாத்தி, பரோட்டாவுக்கு நல்ல காம்பினேஷனாக அமையும்.

என்ன தேவை?

காளான் – 100 கிராம்
உருளைக்கிழங்கு – 3
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – ஒன்று (பெரியது)
கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி
பட்டை – 2 சிறிய துண்டு
பிரிஞ்சி இலை – சிறிது
இஞ்சி-பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன்
கிராம்பு – 2
மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
 மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
 நெய் – 2 டீஸ்பூன்
 முந்திரி – 7
 எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
 உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

காளானை கழுவி நறுக்கவும். உருளைக்கிழங்கை தோல் நீக்கி சதுரங்களாக நறுக்கவும். தக்காளியை சுடுநீரில் சேர்த்து தோல் உரிக்கவும். அதனுடன் பெரிய வெங்காயம், முந்திரி, கொத்தமல்லித்தழை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய், நெய் சேர்த்துச் சூடானதும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்து, காளான், இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

பிறகு, நறுக்கிய உருளைக்கிழங்கு, மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கி, அரைத்த விழுதைச் சேர்த்துப் புரட்டவும்.

எண்ணெய் பிரியும் வரை வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, உருளைக்கிழங்கு வேகும் வரை அடுப்பை சிறு தீயில் வைக்கவும். இறுதியாக நெய் சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

குறிப்பு:  முந்திரியை சிறிது நேரம் ஊறவைத்த பின் அரைக்கவும்.

மஷ்ரூம் மசாலா ஆம்லெட்

பனிவரகு – மஷ்ரூம் – டொமேட்டோ சூப்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

1 thought on “கிச்சன் கீர்த்தனா : ஆலு – மஷ்ரூம் கறி

  1. மின்னம்பலத்தார்களுக்கு ஒரு வேண்டுகோள். உணவு பெயர்களை தமிழ் படுத்தி வெளியிடுங்கள்.
    நன்றி.

Leave a Reply

Your email address will not be published.