சீதோஷ்ண நிலை மாற்றம், மழை போன்ற பருவகால மாற்றத்தினால் தொற்றுகள் பரவுவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஆரோக்கியமான உணவு முறை, நல்ல தூக்கம், போதுமான உடற்பயிற்சியைப் பின்பற்ற வேண்டும்.
முக்கியமாக, காய்ச்சல், சளி, இருமல், அலர்ஜி போன்ற தொந்தரவுகள் இருந்தால் மருந்துக்கடைகளில் சென்று ப்ரிஸ்க்ரிப்ஷன் இல்லாமல் மாத்திரைகள் வாங்கிப் பயன்படுத்துவது நல்லது அல்ல.
நாளடைவில் அதே மருந்துகள் நம் தொற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் திறனையும் இழக்கின்றன. நோய்க்கிருமிகளும் வலிமை பெற்றுவிடுகின்றன. எனவே, சுய மருத்துவத்தைத் தவிர்க்க வேண்டும்.
அடுத்து, நம் வசிப்பிடத்தைச் சுற்றி டெங்குவை உருவாக்கும் கொசுக்கள் உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சளி, காய்ச்சல், இருமல், தலைவலி, அதிக உடல் சோர்வு, காயம் ஏற்பட்டு ஆறாத நிலை, மூச்சுத்திணறல், வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தக் கூடாது.
மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ள வேண்டும், கைகளின் சுத்தம் எப்போதும் அவசியம்.
முக்கியமாக… இன்று பெரும்பாலும் அமர்ந்தபடியே பெரும்பாலான வேலைகள் செய்கிறோம். உடற்பயிற்சிகள் செய்வதில்லை.
அளவு தெரியாமலே உணவை உட்கொள்கிறோம். உடலியக்கமற்ற இந்த வாழ்க்கைமுறை காரணமாக உடல்பருமன் உண்டாகி அதன் விளைவாகவும் தொற்று எளிதில் பரவுவதற்கான சூழல் ஏற்படும்’’ என்கிறார்கள் பொதுநல மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: அமித்ஷா – எடப்பாடி… ஆரம்பமானது ரகசிய பேச்சு!