கோடைக்காலத்தில் உருவாகக்கூடிய நீர்க் கடுப்பு, நீர்த்தாரை எரிச்சல், மாதவிடாய்க் கோளாறுகள், உடல் வெப்பம், உடல் எரிச்சல் போன்ற பாதிப்புகளுக்கு சோற்றுக் கற்றாழை நல்ல மருந்து.
சுத்தமான கற்றாழையின் சோற்றுப் பகுதியை எடுத்துக்கொண்டு, அதற்கு சமமான அளவில் பனங்கற்கண்டினை சேர்த்து காலை, மாலை இருவேளைகளிலும் உண்டு வர உடல் உஷ்ணமும், எரிச்சலும் குறையும்.
வெயில் காலத்தில் சிலருக்குக் கண்களில் எரிச்சல் உண்டாகி கண்கள் சிவந்துவிடும். கற்றாழையின் நுங்குப் பகுதியை எடுத்து இரவில் தூங்குவதற்கு முன் இரு கண்களின் மேல் சற்று நேரம் வைத்தால் உறக்கம் வருவதோடு கண் எரிச்சல் மற்றும் சிவந்த நிறமும் மறையும்.
சில ஆய்வுகளில் கற்றாழையின் சோற்றுப்பகுதியை உட்கொள்வதன் மூலம் கணையத்திலுள்ள பீட்டா செல்கள் தூண்டப்படும் என்றும், இதனால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளனர். மேலும், சர்க்கரை அளவை சரியாகப் பராமரிக்க உதவும் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் என்கிற நிலையைக் கட்டுப்படுத்தும் திறனும் கற்றாழைக்கு உண்டு என்று தெரிவித்துள்ளனர். இதேபோல் சில ஆய்வுகளில் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த கற்றாழை உதவுகிறது என்றும் கூறியுள்ளனர்.
கற்றாழையை ஜூஸுக்காக பயன்படுத்தினாலும், அப்படியே உட்கொள்வதற்குப் பயன்படுத்தினாலும் முதலில் நன்கு அலச வேண்டியது அவசியம். மடலைச் சீவியவுடன் உள்புறமிருக்கும் சோற்றின் மேல் மஞ்சள் நிற திரவம் படர்ந்திருக்கும். இந்த மஞ்சள் திரவம் மிகுந்த கசப்புத்தன்மையை கற்றாழைக்குக் கொடுக்கும். எனவே, நன்கு அலசிய பிறகே பயன்படுத்த வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: வியர்வையை விரட்டும் நறுமணக் குளியல்!
“இந்தியாவுக்கு வெற்றிதான்” : வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி!