நீதிமன்றங்களால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், “குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் போது சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை நீதிமன்றம் நிலுவையில் உள்ள பிடிவாரண்ட்கள் குறித்து ஆழ்ந்த கவனம் செலுத்துகிறது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் பிடிவாரண்ட்களை தமிழக காவல்துறை முறையாக செயல்படுத்தாமல் மெத்தனப்போக்கில் செயல்படுவதாக வேதனை தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்ட்கள் எத்தனை நிலுவையில் உள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
நீதிமன்றங்களால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
“பாஜகவின் அனைத்து சவால்களையும் எதிர்கொள்வோம்”: மல்லிகார்ஜூன கார்கே