சென்னை அண்ணா சாலையில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி இன்று (மே 7) கோலாகலமாக நடைபெற்றது.
ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுகிழமைகளில் சென்னையின் முக்கியமான போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் வாகனமில்லா சாலை ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அண்ணா நகர், பெசன்ட் நகர், தியாகராய நகர் பகுதிகளில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அண்ணா சாலையில் ஸ்பென்சர் சாலை சந்திப்பு முதல் ஜிபி சாலை சந்திப்பு வரை இன்று காலை ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் உற்சாகமாக பங்கேற்று நடனமாடி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் கராத்தே, குத்துசண்டை, கூடைப்பந்து, கயிறு இழுத்தல், ஸ்கேட்டிங் போன்ற போட்டிகளும் நடைபெற்றது.
செல்வம்
வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: மீனவர்களுக்கு எச்சரிக்கை!