அரையாண்டு விடுமுறை நீட்டிப்பு!

தமிழகம்

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை ஜனவரி 4 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சிபிஎஸ்சி மற்றும் மாநில கல்வித் திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு இன்றுடன் (டிசம்பர் 23) அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று முடிந்துள்ளது.

நாளை (டிசம்பர் 24) முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை அனைத்து மாணவர்களுக்கும் அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுவதாகப் பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 5 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.

6 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஏற்கெனவே அறிவித்தபடி ஜனவரி 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் மாற்றம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்குப் பயிற்சி இருப்பதால் ஜனவரி 4-ம் தேதி வரை தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோனிஷா

எல்லைப் பிரச்சினை: கர்நாடகம்போல் களத்தில் இறங்கிய மராட்டியம்

ஐபிஎல் வரலாற்றில் இமாலய சாதனை படைத்தார் சாம் கர்ரன்

+1
2
+1
2
+1
6
+1
1
+1
13
+1
5
+1
3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *