அரையாண்டு விடுமுறை தேதி அறிவிப்பு!

தமிழகம்

தமிழகத்தில் டிச.24-ம் தேதி முதல் ஜன.1-ம் தேதி வரை, 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்தே பள்ளிகளுக்கு அவ்வப்போது விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், தனியார் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளிலும், ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு, அரையாண்டு தேர்வு நேற்று(டிசம்பர் 16) துவங்கியது.

முதலில் மொழிப் பாடத்துக்கும், பின், அறிவியல், கணிதம், பொருளியல் உள்ளிட்ட மற்ற பாடங்களுக்கும் தேர்வு நடக்கிறது. மாவட்ட அளவில், பொதுவான வினாத்தாள்கள் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்று (டிசம்பர் 16)முதல் டிசம்பர் 23 ஆம் தேதி வரையும், 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு, டிசம்பர் 19 முதல் டிசம்பர் 23 ஆம் தேதி வரையும் அரையாண்டு தேர்வு நடைபெறுகிறது.

தேர்வுக்கு பிறகு, டிசம்பர் 24-ம் தேதி முதல் ஜன.1-ம் தேதி வரை 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 2 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கலை.ரா

மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயண டோக்கன்: 40 இடங்களில் வழங்க ஏற்பாடு!

அதிகரிக்கும் புற்றுநோய்: மத்திய அரசு கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்!

+1
4
+1
5
+1
5
+1
9
+1
8
+1
3
+1
9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *