வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்தது.
சாத்தனூர் அணை திறந்துவிடப்பட்டதால், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் தண்ணீர் சூழ்ந்தது.
இதன் காரணமாக கடந்த 29ஆம் தேதி முதல் விழுப்புரம் மாவட்டத்துக்கு தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, டிசம்பர் 9ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.
ஆனால் மழை வெள்ளம் பாதிப்பைச் சந்தித்த மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் நனைந்த புத்தகங்களை காயவைத்துக்கொண்டு படிக்க முடியாத சூழ் நிலையில் இருக்கின்றனர்.
மழைபாதிப்பை சந்தித்த மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வை தள்ளி வைப்பது தொடர்பாக 12 மாவட்ட தலைமை கல்வி அதிகாரிகளுடன் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை செய்தார்.
இந்தசூழலில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டு ஜனவரி 2 முதல்10 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
10 லாட்டரி டிக்கெட் வாங்கி 12 கோடி தட்டி சென்ற மனிதர்: என்னா ஒரு புத்திசாலித்தனம்!