கோல்டன் ஹவரை தாண்டியிருந்தால்… டாக்டர் பாலாஜி உடல்நிலை – மருத்துவர்கள் சொல்வது என்ன?

தமிழகம்

தாக்குதலுக்கு உள்ளான டாக்டர் பாலாஜி நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சென்னை, கிண்டி கலைஞர் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் முதுநிலை  டாக்டர் பாலாஜி, அவரது ஓபி அறையில் வைத்து புதிய பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷால் தாக்குதலுக்கு உள்ளானார்.

இந்த தாக்குதலில் டாக்டருக்கு, கழுத்து, காது, தலை ஆகிய பகுதிகளில் ரத்த காயங்கள் ஏற்பட்டன.

உடனடியாக கிண்டி அரசு மருத்துவமனையிலேயே அனைத்து துறை மருத்துவர்கள் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கிண்டி மருத்துவமனைக்குச் சென்று டாக்டர் உடல்நலம் குறித்து விசாரித்தார். தொடர்ந்து அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

டாக்டர் பாலாஜி பற்றியும் அவருடைய உடல்நிலைப் பற்றியும் மருத்துவ வட்டாரங்களில் விசாரித்தோம்.

“கொஞ்சம் கோபப்படக்கூடிய டாக்டர்தான். ஆனால், நோயாளிகளுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கக்கூடியவர். அவருக்கு இதய நோய் பாதிப்பு உள்ளதால் ஏற்கனவே இரண்டு ஸ்டென்ட் வைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் இதய பிரச்சினை அதிகமானதால் பேஸ்மேக்கர் வைக்கப்பட்டு, பணியாற்றி வருகிறார். ecosprin என்ற மாத்திரையையும் எடுத்து வருகிறார்.

இந்த மாத்திரை ரத்த நாளங்களில் ரத்தக் கட்டிகள் (blood clot) உருவாவதைத் தடுக்க உதவுகிறது. இதனால் சிறுகாயங்கள் ஏற்பட்டால் கூட நிற்காமல் ரத்தம் வெளியேறும்.

அப்படிதான் இன்று காலை டாக்டர் பாலாஜி கத்தியால் தாக்கப்பட்டதால் அவருக்கு அதிகளவு ரத்தம் வெளியேறியிருக்கிறது.

சாதாரணமாக மனிதர்களுக்கு ஹீமோக்ளோபின் அளவு 12க்கு அதிகமாக இருக்க வேண்டும். ஆனால், டாக்டர் பாலாஜிக்கு நிற்காமல் ரத்தம் வெளியேறியதால் ஹீமோக்ளோபின் அளவு 5க்கும் கீழ் குறைந்துள்ளது.

இதனால் டாக்டர் பாலாஜி அபாய நிலைக்கு சென்றதால் அவசரமாக 3 யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டு ஹீமோக்ளோபின் அளவை அதிகப்படுத்தினோம். இதனால் அபாய கட்டத்தை கடந்து நலமாக இருக்கிறார்.

பாலாஜி உடல்நிலையை பற்றி தெரிந்ததால், உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கோல்டன் ஹவர் என்று சொல்லக் கூடிய அந்த அரை மணி நேரத்தை கடந்திருந்தால் உயிர் பிழைத்திருக்க முடியாது.

இந்தசூழலில்தான் ஆத்திரமடைந்த சக மருத்துவர்கள் மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்” என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வணங்காமுடி

எம்.எல்.ஏ-வை மிரட்டிய 17 வழக்குகளில் தேடப்படும் ரவுடி கைது!

எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையம் வார்னிங்!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *