வாடகை பாக்கி செலுத்தாததால் குத்தகை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து கிண்டி ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் தாக்கல் செய்துள்ள மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (செப்டம்பர் 9) பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது.
தமிழக அரசுக்கு தர வேண்டிய ரூ. 730 கோடி வாடகையை கிண்டி ரேஸ் கோர்ஸ் அரசுக்கு செலுத்தாததால், குத்தகை ஒப்பந்ததை ரத்து செய்த வருவாய்தூறை இன்று காலை கிண்டி ரேஸ் கோர்ஸுக்கு சீல் வைத்தது.
இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கிண்டி ரேஸ்கோர்ஸ் நிர்வாகம் சார்பில் அவசர வழக்காக விசாரிக்க முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அதனை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை பிற்பகல் 3 மணிக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
“நிரபராதி என நிரூபிப்போம்”: சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான சி.விஜயபாஸ்கர் பேட்டி!
தெலுங்கில் மூன்றாவது தலைமுறை ஹீரோ அறிமுகம்!