குரூப் 5 ஏ தேர்வுக்கு இன்று(ஆகஸ்ட் 23) முதல் வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.
அதன்படி துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர்,வணிக வரித்துறை உதவி ஆணையர்,கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர்,ஊரகவளர்சித்துறை துணை இயக்குநர்,மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய 6 பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வுக்கு ஆகஸ்ட் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
92 இடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நேற்றுடன்(ஆகஸ்ட் 22) முடிவடைந்த நிலையில், 3,16,678 பேர் விண்ணப்பித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்தது.
இந்தநிலையில் குரூப் -5 ஏ தேர்வுக்கான அறிவிப்பாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தலைமைச்செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர், உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 161 இடங்களை நிரப்ப குரூப் -5 ஏ தேர்வு நடைபெற உள்ளது.
இன்று (ஆகஸ்ட் 23) முதல் வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் குரூப் 5 ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
குரூப் 5 ஏ எழுத்துத்தேர்வு டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
கலை.ரா
TNPSC Group1 : விண்ணப்பப் படிவங்களை திருத்தலாம், எப்படி?