குருப் 2 மற்றும் குரூப் 2A தேர்வில் மேலும் 213 காலி பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி இன்று (நவம்பர் 9) தெரிவித்துள்ளது.
தமிழக அரசுப் பணியிடங்களுக்குத் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
நூற்றுக்கணக்கான அரசு பணியிடங்களுக்காக லட்சக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பிப்பது வழக்கமாக உள்ளது. இதனை சுட்டிகாட்டி, காலியிடங்களை அதிகப்படுத்தவேண்டும் என்று மாணவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
இந்தாண்டுக்கான வன அலுவலர், உதவி ஆய்வாளர், உதவியாளர் போன்ற பணிகளுக்கான குருப் 2 மற்றும் குரூப் 2A கான அறிவிப்பைக் கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி வெளியிட்டது. அப்போது காலி பணியிடங்கள் 2337 என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து கடந்த கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி முதல்நிலை தேர்வு நடைபெற்றது.
இந்த நிலையில் குருப் 2 மற்றும் குரூப் 2A காலி பணியிடங்கள் 213ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி இன்று(நவம்பர் 9) தெரிவித்துள்ளது. இதன் மூலம் மொத்த காலி பணியிடங்கள் 2540 ஆக அதிகரித்துள்ளது.
இந்த அறிவிப்பு வெளியானதை ஒட்டி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
சம்பந்தமே இல்லாமல் ஒரு மனிதனை பார்த்து கோபம் வருகிறதா? வீடியோ வெளியிட்ட அஜித்தை பாராட்டிய சத்யராஜ்