குரூப் 2, 2 ஏ ரிசல்ட்: டிஎன்பிஎஸ்சி புதிய தகவல்!

தமிழகம்

குரூப் 2, 2 ஏ தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியாகும் ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் என்று அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 5 ஆயிரத்து 208 இடங்களுக்கான குரூப் 2, 2ஏ பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகி, அதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த மே மாதம் 21ம் தேதி நடைபெற்றது

இந்த தேர்வை எழுதுவதற்கு 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 9 லட்சத்து 94 ஆயிரத்து 890 பேர் தேர்வை எழுதினர்.

இந்த நிலையில், குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளிவரும் ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் என்று அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று (அக்டோபர் 28 ) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகளிருக்கான இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன.

மேற்படி வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்கிய நிலையில் அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனைதொடர்ந்து உயர்நீதிமன்றத்தின் ஆணைகளை செயல்படுத்துவது தொடர்பாக மென்பொருளில் உரிய மாற்றங்கள் செய்யும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது.

அப்பணி நிறைவுபெற்ற பின்னர் தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்.

அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மட்டுமே அணுகுமாறு தெரிவிக்கப்படுகிறது.” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

கொடநாடு வழக்கு: சிபிசிஐடி போலீஸ் ஆஜர்!

டி20: ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து போட்டி ரத்து!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *