சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு மாத்திரை எவ்வளவு முக்கியமோ அந்தளவு உணவு கட்டுப்பாடும் மிக முக்கியம். உணவு கட்டுப்பாடு என்றால் பத்தியம் இருக்க வேண்டும் என்ற அர்த்தமல்ல.
தங்களது நோயின் தன்மை, வயது, எடை, இளம் பெண்களாக இருந்தால் கர்ப்ப காலத்தில் பின்பற்ற வேண்டிய உணவு முறை ஆகியவற்றை தெரிந்து கொண்டு சாப்பிடுவது நல்ல பலனை அளிக்கும். உதாரணத்துக்கு இந்த வேர்க்கடலை – முளைப்பயறு சாலட் டீ அல்லது காபியுடன் சாப்பிட அனைவருக்கும் ஏற்றது.
என்ன தேவை?
வறுத்த வேர்க்கடலை – அரை கப்
முளைவிட்ட பாசிப்பயறு – ஒரு கப்
தக்காளி – ஒன்று
பெரிய வெங்காயம் – ஒன்று
பொடியாக நறுக்கிய மல்லித்தழை – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – ஒன்று
துருவிய இஞ்சி – அரை டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
எலுமிச்சம்பழச் சாறு – ஒரு டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
முளைவிட்ட பயறை, மிகவும் குழைந்துவிடாமல் வேகவிடவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மூன்றையும் பொடியாக நறுக்கவும். அகலமான ஒரு பாத்திரத்தில் வேர்க்கடலை, முளைப்பயறு, தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித்தழை, உப்பு, எலுமிச்சம்பழச்சாறு.. எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும். தேவையானால் கரம் மசாலா தூள் சேர்த்துக்கொள்ளவும்.
எடை குறைப்பு: தவிர்க்க வேண்டியவை… சாப்பிட வேண்டியவை!