குன்னூரில் பூத்து குலுங்கும் பச்சை ரோஜா!

குன்னூர் சிம்ஸ் பூங்காவில்  கோடை சீசனுக்கு நடவு செய்யப்பட்ட பச்சை ரோஜா பூத்து குலுங்குவது சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களில் குன்னூர் சிம்ஸ் பூங்கா முக்கியமானது. இந்த பூங்காவில் நூற்றுக்கணக்கான அரிய வகை மரங்கள் மற்றும் மலர் செடிகள் உள்ளன.

சிறப்பாக பூங்கா பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு பல வண்ணங்களில் ஆன ரோஜா மலர்களும் உள்ளன.

இந்த நிலையில் சிம்ஸ் பூங்கா நிர்வாகத்தின் புதிய முயற்சியாக பச்சை ரோஜா செடிகள் தொட்டியில் வளர்க்கப்பட்டு வந்தன. தற்போது பசுமைக்குடிலில் வளர்க்கப்பட்டு வந்த செடிகளில் பச்சை ரோஜாக்கள் மலர்ந்துள்ளன.

இதைப் பாதுகாப்புடன் வளர்த்து பூங்கா முழுவதிலும் நடவு செய்ய தோட்டக்கலைத் துறையினர் முடிவு செய்துள்ளனர். 

சிம்ஸ் பூங்காவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் இந்த பச்சை ரோஜாக்களை மிகுந்த ஆர்வத்துடன் ரசித்து புகைப்படம் எடுத்து செல்கின்றனர். கடந்த காலங்களில் சிம்ஸ் பூங்காவில் பச்சை ரோஜா வளர்க்கப்பட்டது. நாளடைவில் அதன் வளர்ச்சி தடைப்பட்டது. தற்போது வெளியில் இருந்து பச்சை ரோஜா செடி கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு இந்த புதிய முயற்சி வெற்றி பெற்றுள்ளது‌. 

எதிர்காலத்தில் சீதோஷண நிலைக்கு ஏற்ப பச்சை ரோஜா நாற்றுக்களை பூங்கா முழுவதும் நடவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்தனர். 

ராஜ்

“மாவீரன்” அப்டேட் வெளியிட்ட படக்குழு!

அந்த ஆடியோ: பிடிஆர் விளக்கம்!

கிச்சன் கீர்த்தனா: சம்மரில் சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts