சென்னை அண்ணாசாலை ரிச்சி தெரு மற்றும் பாரிமுனையில் உள்ள 120 கடைகளுக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் தொழில்வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. 2022 – 23 நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டில் தொழில்வரி செலுத்தாதவர்களின் பெயர் பட்டியலைச் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் முன்னதாக வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை அண்ணாசாலை ரிச்சி தெருவில் உள்ள 90 கடைகளுக்கும் பாரிமுனை நயினியப்பன் தெருவில் உள்ள 30 கடைகளுக்கும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இன்று (டிசம்பர் 8) காலை சீல் வைத்தனர்.
நீண்ட காலமாகத் தொழில் வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து சென்னை மாநகராட்சி, ”பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் – 05 கோட்டம் – 62-க்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் தொழில் வரி செலுத்தாமலும் தொழில் உரிமம் பெறாமலும் நடத்தி வந்த கடைகளுக்குப் பெருநகர சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919, பிரிவு 397(A)-ன் படி இன்று (டிசம்பர் 8) சென்னை மாநகராட்சியால் பூட்டி சீல் வைக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.
மோனிஷா
இமாச்சல் ரிசல்ட்: பாஜகவுக்கு டஃப் ஃபைட் கொடுக்கும் பிரியங்கா
குஜராத் தேர்தல்: 10 மணி நிலவரம்!