கோவை : மூடப்படாத பாதாள சாக்கடையில் சிக்கிய அரசு பேருந்து!

Published On:

| By Kavi

கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள், குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள், சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிந்து மூடாமல் விடப்பட்ட சாலையில் அரசு பேருந்து சிக்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காந்திபுரத்தில் இருந்து கண்ணம்மா நாயக்கனூர் வரை செல்லக்கூடிய TN 38N 2859 எண் கொண்ட பேருந்து, கோவை மதுக்கரை மார்க்கெட் சாலையில் மூடாமல் விடப்பட்ட பள்ளத்தில் சிக்கி கொண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பாதாள சாக்கடை அமைப்பதற்கு சாலையில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் முடித்து பள்ளங்கள் சரியாக மூடப்படாததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்துத் துறையினர் கிரேன் மூலம் பள்ளத்தில் புதைந்த பேருந்தை மீட்டனர். பின்னர் போக்குவரத்து சரி செய்யப்பட்டு இயல்பு நிலை திரும்பியது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை தெற்கு மண்டலத்துக்குட்பட்ட  87-வது வார்டு குனியமுத்தூர் பாரதி நகர் பிரதான சாலையில் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட குழி சரியாக மூடாத காரணத்தால், அந்த வழியாக குழந்தைகளை ஏற்றி வந்த தனியார் பள்ளி பேருந்து குழியில் சிக்கியதால் எதிர்பாராமல் பேருந்து சரிந்ததும் பேருந்தில் இருந்த குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டதும் நினைவுகூரத்தக்கது.

-ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தோனியின் ஓய்வு குறித்து சிஎஸ்கே நிர்வாகம் சொன்ன முக்கிய தகவல்!

பாஜகவுக்கு 20 ஓட்டா? – அப்டேட் குமாரு

அடை மழை வெளுக்கப் போகுது… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தக் லைஃப் : கமல், சிம்பு உடன் இணையும் அசோக் செல்வன்… படப்பிடிப்பு எங்கு தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share