உதகையில் உள்ள ராஜ்பவனில் மே 27, 28 தேதிகளில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
துணைவேந்தர்கள் மாநாடு
நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் உள்ள ராஜ்பவனில், கடந்த ஜூன் 5ஆம் தேதி பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கான மாநாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டியிருந்தார். இந்த மாநாட்டில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, மீண்டும் உதகமண்டலத்தில் உள்ள ராஜ்பவனில் மே 27, 28 ஆகிய தேதிகளில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு நடைபெற உள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இதற்காக ஆளுநர் இன்று (மே 25) சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு செல்கிறார். அங்கிருந்து உதகமண்டலம் செல்கிறார்.
தொடர்ந்து, மே 27 மற்றும் 28 தேதிகளில் நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டில் “பல்கலைக்கழகங்களில் கடைபிடிக்கப்படும் நற்பண்புகள்” தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது. இதில், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார்.
இந்த மாநாட்டில் தமிழகத்தில் உள்ள 48 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி. நீலகிரி செல்வதைத் தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
6ஆம் கட்ட தேர்தல்… 25.76% வாக்குப்பதிவு : வாக்களித்த அரசியல் தலைவர்கள்!
அமரன் டீமுக்கு சிவகார்த்திகேயன் பிரியாணி விருந்து!