74-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலை அருகே உள்ள உழைப்பாளர் சிலை முன்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (ஜனவரி 26) தேசிய கொடியை ஏற்றினார்.
பின்னர் ஆர்.என்.ரவி முப்படை மற்றும் காவல்துறை அதிகாரிகளின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்

இதனை தொடர்ந்து முதலமைச்சரின் வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் விருது ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார்.
குடியரசு தின நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செல்வம்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
விதிமுறைகளை மீறிய நம்பர் பிளேட்: போலீசார் அதிரடி!