மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் தென் மாவட்ட மக்கள் அரசு நிர்வாகத்தால் விடுக்கப்படும் அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுக்கொண்டுள்ளார்.
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக கன மழை பெய்து வருவதால் பல அணைகள் நிரம்பி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளன. இதனால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் பிரதான சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.நெல்லையில் வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மற்றும் படகு மூலம் மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர்.
இந்தசூழலில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தென் மாவட்ட மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
ஆளுநர் மாளிகை ட்விட்டர் பக்கத்தில், “தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள சகோதர, சகோதரிகள் கனமழை மற்றும் வெள்ளத்தால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். அவர்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த இக்கட்டான நேரத்தில் தயவு செய்து வீட்டிலேயே இருக்கவும். மிகவும் அவசியமில்லாவிட்டால் வெளியே வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன். அரசு நிர்வாகத்தால் விடுக்கப்படும் அறிவுறுத்தல்களை தயவுசெய்து கடைப்பிடிக்கவும்.
மத்திய, மாநில அரசுத்துறைகள் இயல்புநிலையை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. விரைவில் நிலைமை சீரடைய பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
மிதக்கும் தென் மாவட்டங்கள் : உதவிக்கு வாட்ஸ் அப் எண் அறிவிப்பு!
வெள்ளத்தில் தென் மாவட்டங்கள்: மோடியிடம் நேரம் கேட்கும் ஸ்டாலின்