government transport will be privatized

அரசுப் போக்குவரத்து தனியார் மயமாவது உறுதி: டிடிவி தினகரன்

தமிழகம்

சென்னையில் அரசு போக்குவரத்தைத் தனியார் மயமாக்குவது உறுதியாகத் தெரிகிறது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்குவதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின.

சென்னையில் மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் அரசு பேருந்துகள் மட்டுமே இயங்கி வரும் நிலையில், தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என சிஐடியூ இன்று போராட்டம் நடத்தியது.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்,

“தற்போது விடப்பட்டுள்ள டெண்டர் என்பது உலக வங்கி வழங்கியுள்ள கருத்துரை அடிப்படையில், தனியார் பேருந்துகளை இயக்குவதற்கான சாதக பாதகங்களை ஆய்வு செய்வதற்காக ஆலோசகர்களை நியமிப்பதற்கான டெண்டர் ஆகும்.

ஆலோசகர்கள் அளிக்கும் அறிக்கையை அரசு ஆய்வு செய்து அதன்பிறகே இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு பேருந்துகள் தனியார் மயமாவது என்பதற்கு இடம் கிடையாது.

சென்னையில் உள்ள அரசு வழித்தடங்களில் ஒப்பந்தம் அடிப்படையில் தான் தனியார் பேருந்துகள் இயங்கும்” என்று பேசியிருந்தார்.

அமைச்சர் சிவசங்கர் பேசியதன் மூலம் அரசு பேருந்துகள் தனியார் மயமாவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுமக்களுக்கு சேவை வழங்கும் அரசு பேருந்துகளைத் தனியார் மயமாக்க தி.மு.க. அரசு திட்டமிடுவதாக ஆளுங்கட்சி தொழிற்சங்கமே குற்றம்சாட்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னையில் தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்குவதற்கான ஏற்பாடுகளை செய்துவருவதாக போக்குவரத்துத்துறை அமைச்சரே கூறியிருப்பதன் மூலம், பேருந்து போக்குவரத்து, தனியார் மயமாக்கப்படும் என்பது உறுதியாகத் தெரியவருகிறது.

மக்களுக்குக் குறைந்த செலவில் பொதுப்போக்குவரத்தை வழங்கும் கடமையில் இருந்து அரசு விலகி, தனியார் மயமாக்க முடிவு செய்வது ஏற்கத்தக்கதல்ல.

பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் இருதரப்பையும் பாதிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்.

போக்குவரத்துத்துறையில் புரையோடியிருக்கும் முறைகேடுகளைக் களையெடுத்து லாபநோக்கில் போக்குவரத்து துறையை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மோனிஷா

உலகம் சுற்றும் வாலிபன்: அஜித்தின் அடுத்த பிளான்!

வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் : பீகாரில் ஒருவர் கைது!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *