மண் தரையில் அமர்ந்து கல்வி கற்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்!

தமிழகம்

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே போதிய கட்டட வசதி இல்லாததால் மண் தரையில் அமர்ந்து அரசுப் பள்ளி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

வத்திராயிருப்பு தாலுகாவுக்கு உட்பட்ட கீழக்கோட்டையூர் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு அரசு நடுநிலைப் பள்ளி கடந்த 2018ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அதிலும் குறிப்பாக மேல கோட்டையூர், அக்கனாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து எண்ணற்ற மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

நடுநிலைப் பள்ளியில் இருந்து உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகியும் கூடுதல் பள்ளிக் கட்டடம் இல்லை. இருந்த ஒரு கட்டடமும் சேதமடைந்து காணப்படுகிறது. அந்த கட்டடமும் மூடப்பட்டு விட்டதால் மாணவர்கள் தரையில் அமர்ந்து கல்வி கற்க வேண்டிய நிலை உள்ளது.

மழை, வெயில் என்று பாராமல் தரையில் அமர்ந்து மாணவர்கள் கல்வி கற்க வேண்டிய சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே, தரம் உயர்த்தப்பட்ட இந்தப் பள்ளிக்கு கூடுதல் கட்டடம் அமைத்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ராஜ்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *