நவம்பர் 1: கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவு!

தமிழகம்

நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு 12,525 ஊராட்சிகளிலும்  கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சிகள் தினத்தினை முன்னிட்டு நவம்பர் 1ம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்திட வேண்டும் என்றும்,

இந்த கிராம சபைக் கூட்டத்தில், அவ்வூராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து முழுமையாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட அலுவலகத்தில் ஏதேனுமொரு இடத்தில் பல்வேறு துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பணிகள் குறித்த கண்காட்சிகள் நடத்தலாம் என்றும்,

அரசால் வெளியிடப்படும் திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு குறித்த குறும்படங்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராம ஊராட்சி அளவில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மைப் பணியாளர்கள், மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளைச் சார்ந்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக கிராம சபையில் பாராட்டுத் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 உள்ளாட்சிகள் தினத்தினை கொண்டாடும் விதமாக சிறப்பாக செயலாற்றிய, பூர்வாங்கப் பணிகளை மேற்கொண்ட பசுமை மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாத்து அந்த ஊராட்சியின் வருவாயினை அதிகரித்து,

அதன் பலனை ஊராட்சிக்கு சரியான வகையில் பயன்படுத்திய கிராம ஊராட்சித் தலைவர்களைக் கொண்டு கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் போன்றவற்றை நவம்பர் முதல் வாரத்தில் நடத்திடலாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

‘உள்ளாட்சிகள் தினம்’ குறித்த நிகழ்வுகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அரசிற்கு அனுப்ப வேண்டும் என்றும் குறிப்பிட்டு, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தின் ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

கலை.ரா

பரம எதிரிகள் மோதல் ! காத்திருக்கும் ’தி ராக்’

பன்னீர் – பழனிசாமியை இணைக்கும் திமுக?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *