தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு இன்று (அக்டோபர் 10) உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில்,
சேலம் மாநகர வடக்கு துணை ஆணையராக இருந்த கவுதம் கோயல், தாம்பரம் காவல் துணை ஆணையராகவும்,
கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம் உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த பிருந்தா ஐபிஎஸ், சேலம் மாநகர வடக்கு துணை ஆணையராகவும்,
ஈரோடு, சத்தியமங்கலம் வட்டம் உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த அய்மான் ஜமால், ஆவடி மாநகர காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையராகவும்,
ஆவடி மாநகர காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையராக இருந்த பாஸ்கரன், மதுரை, தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 6வது பட்டாலியன் கமாண்டன்ட் ஆகவும்,
காத்திருப்போர் பட்டியலில் இருந்த சுகுணா சிங் சென்னை, ரயில்வே எஸ்.பி.யாகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ஸ்டாலின் திமுகவுக்கு மட்டுமே முதல்வராக உள்ளார்: மத்திய பாஜக குழு!
ஆளுநர் ஆர்.என்.ரவி – பாஜக மத்திய குழு நேரில் சந்திப்பு!
யுபிஐ வசதியுடன் அறிமுகமான ‘Nokia 105’ கிளாசிக்: விலை எவ்வளவு?