6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழகம்

தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 5) 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான ஜவகர், ஏ.கார்த்திக், மணிவாசன், மங்கத்ராம் சர்மா, டி.ஆனந்த், எஸ்.மதுமதி ஆகியோர் இன்று இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அந்த வகையில், சிட்கோ மேலாண் இயக்குநராக இருந்த டி.ஆனந்த் ஐ.ஏ.எஸ். ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அதுபோல் அந்தத் துறையின் நலத்துறை செயலாளராக ஜவகர் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.

கால்நடை பராமரிப்பு, மீன்வளம், மீன்வளத் துறை செயலாளராக ஏ.கார்த்திக் ஐ.ஏ.எஸ்ஸும், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை செயலாளராக மங்கத்ராம் சர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதுபோல், மணிவாசன் ஐ.ஏ.எஸ். பொதுப்பணித் துறை செயலாளராகவும், எஸ்.மதுமதி ஐ.ஏ.எஸ். தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்தின் மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜெ.பிரகாஷ்

தமிழகம் முழுவதும் 21 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *