அரசு வழக்கறிஞர்களின் கட்டண விகிதம் உயர்வு!

Published On:

| By Kavi

Government lawyers fee increased

அரசு வழக்கறிஞர்களின் கட்டண விகிதத்தை இரு மடங்காக உயர்த்தி  முதல்வர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 16)  வழக்கறிஞர்களிடம் அரசாணை வழங்கினார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் கீழ் மாவட்ட குற்றவியல், உரிமையியல், சார்பு நீதிமன்றங்கள் மாஜிஸ்திரேட் மற்றும் முன்சீப் நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. சுமார் 700க்கும் மேற்பட்ட அரசு வழக்கறிஞர்கள் அரசு சார்பாக வழக்கினை நடத்தி வருகின்றனர்.

இந்த நீதிமன்றங்களில் வழக்குகளை நடத்தும் அரசு வழக்கறிஞர்களின் கட்டண விகிதம் 1995ஆம் ஆண்டுக்குப் பிறகு மாற்றி அமைக்கப்படாமல் இருந்தது. முன்னாள் முதல்வர் கலைஞர் 2006ம் ஆண்டு பதவியேற்றதும், அரசு வழக்கறிஞர்களின் கட்டண விகிதத்தை மாற்றி அமைத்திட 2007ஆம் ஆண்டு ஒரு குழுவை அமைத்தார்.

அக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், 2011ஆம் ஆண்டு கட்டண விகிதம் கணிசமாக உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டது. 2011ஆம் ஆண்டுக்குப்பின் மாற்றி அமைக்கப்படவில்லை.

இந்நிலையில் அரசு வழக்கறிஞர்களின் கட்டண விகிதத்தை மாற்றி அமைப்பது அவசியம் என அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா அரசுக்குப் பரிந்துரைத்தார்.

இந்த பரிந்துரையின் அடிப்படையில், அரசு வழக்கறிஞர்களின் கட்டண விகிதத்தை இரு மடங்காக உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இதனால் உயர்நீதிமன்றம் தவிர்த்த அனைத்து நீதிமன்றங்களில் சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளை நடத்தும் அனைத்து அரசு வழக்கறிஞர்களும் பயன் பெறுவார்கள்.

கட்டண விகிதத்தை இரு மடங்காக உயர்த்தி வழங்குவதற்கான அரசாணையை விழுப்புரம் மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர் டி.எஸ்.சுப்ரமணியன், சென்னை மாநகர குற்றவியல் அரசு வழக்கறிஞர் தேவராஜன், ராமநாதபுரம் மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர் கார்த்திகேயன் மற்றும் சென்னை மாநகர உரிமையியல் அரசு வழக்கறிஞர் ஷாஜகான் ஆகியோரிடம் முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தலைவர் செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலாளர் அமுதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

“எல்லாம் தந்திரம்” – செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் ED வாதம் : தீர்ப்பு ஒத்திவைப்பு!

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல்!

பழைய சகோதரன் பாலஸ்தீனமா? புதிய தோழன் இஸ்ரேலா? சவுதி இளவரசர் முடிவு என்ன?

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share