பகுதி நேர ஆசிரியர்கள்: பணி நிலைப்பும் இல்லை, பொங்கல் போனஸும் இல்லை – அன்புமணி ராமதாஸ்

Published On:

| By Monisha

தமிழ்நாட்டில் பகுதிநேர ஆசிரியர்களுக்குப் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் உற்சாகத்தில் உள்ளனர். ஆனால் பகுதி நேர ஆசிரியர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேருக்கு இந்த ஆண்டும் பொங்கல் போனஸ் வழங்கப்படவில்லை. 11 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அவர்களுக்குப் பொங்கல் போனஸ் மறுக்கப்படுவது எந்த வகையிலும் நியாயமற்றது.

பகுதி நேர ஆசிரியர்கள் மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் அவர்களின் குடும்பச் செலவுகளுக்கே போதாது எனும் நிலையில், பொங்கல் திருநாளைக் கொண்டாட அவர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது தான் நியாயமாகும்.

பகுதி நேர ஆசிரியர்களின் நிலைமையை உணர்ந்து அவர்கள் அனைவருக்கும் பொங்கல் போனஸ் வழங்குவதற்குத் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றுப் பணி நிலைப்பு செய்யவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மோனிஷா

3 ஆவது முறையாக மருத்துவமனையில் துரைமுருகன் அனுமதி!

எது இருந்தால் சிறப்பு… தன்னம்பிக்கையா? தெளிவா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share