அரசு அலுவலகங்கள் மூடப்படும்: அரசு ஊழியர் சங்கத்தின் போராட்ட எச்சரிக்கை!

தமிழகம்

ஒரு காலத்தில் திமுகவுக்கு, ‘சம்பளக் காரங்க கட்சி’ என்றே பெயர். அதாவது அரசு ஊழியர்கள் பல பேர் திமுகவைத்தான் ஆதரித்தார்கள் என்பதாலேயே அக்கட்சிக்கு இப்படி ஒரு பெயர் வந்தது. ஆனால் இப்போது அரசு ஊழியர்கள் திமுக அரசுக்கு எதிராக போராட்டங்களை கூர்மைப் படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.

கடந்த மார்ச் 20 ஆம் தேதி நிதியமைச்சர் பிடிஆர் தாக்கல் செய்த 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் முக்கியமான கோரிக்கைகள், திமுகவின் கடந்த சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகள் எதுவும்  அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே அரசு ஊழியர் சங்க மாநாட்டில் கலந்துகொண்டு, ‘நிதி நிலைமை சரியானதும் உங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்’ என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசியிருந்தார்.

பட்ஜெட்டுக்கு சில நாட்கள் முன்பு, நிதி நிலை முன்னேறியிருக்கிறது என்று பிடிஆர் சொன்னதன் அடிப்படையில் தங்களுக்கு சில சாதகங்களாவது இந்த பட்ஜெட்டில் இருக்கும் என்று எதிர்பார்த்தனர் அரசு ஊழியர்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது நடக்காததால். கடுமையான அதிருப்தி அடைந்த அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டங்களில் தீவிரமாக இறங்க முடிவு செய்துவிட்டனர். 

Government employees strike warning

நாளை மார்ச் 28ஆம் தேதி  அனைத்து துறை அரசு ஊழியர்களின் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர், அதைத் தொடர்ந்து காலவரையறையற்ற வேலை நிறுத்தப்  போராட்டமும்  நடக்கலாம் என்கிறார்கள். இதுகுறித்து  ஏப்ரல் முதல் வாரத்தில் அரசு ஊழியர்கள் சங்கத்தின் செயற்குழுவைக் கூட்டி முடிவு செய்ய இருக்கிறார்கள்.

அரசு ஊழியர் சங்கத்தின் கடலூர் மாவட்டத் தலைவர் அரிகிருஷ்ணனிடம் மின்னம்பலம் சார்பாக பேசியபோது அவர் நம்மிடம்,  

Government employees strike warning

“திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஆறு லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு சட்டத்திற்கு உட்பட்டு ஓய்வு ஊதியமாக ரூ 7800 கொடுக்க வேண்டும்.

இதுபோன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (மார்ச் 28) ஒரு நாள் போராட்டம் செய்கிறோம்.  அடுத்தகட்ட போராட்டம் அரசு எதிர்பார்க்காத அளவுக்கு பெரிய அளவில் வெடிக்கும்” என்று சஸ்பென்ஸ் வைத்தார்.

அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் தமிழ்செல்வி மின்னம்பலத்திடம் அரசு ஊழியர்களின் எண்ண ஓட்டத்தை எடுத்துரைத்தார்.

”மத்திய அரசு  மார்ச் 24ஆம் தேதி 4% சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்துள்ளது.  ஆறு மாதத்திற்கு ஒரு முறை என்று மத்திய அரசு அறிவிக்கிறது.  ஆனால் மாநில அரசு இன்னும் அறிவிக்காமல் வருடத்திற்கு ஒரு முறை என்று காலதாமதம் செய்து வருகிறது.

தமிழக அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடிக்கப்பட்ட 52 ஆயிரம் கோடி பணத்தை (PFRDA) ஓய்வூதிய ஒழுங்காற்று ஆணையத்தில் செலுத்தவும் இல்லை.  அதில் உறுப்பினராக சேரவும் இல்லை. அந்த பணத்தை எடுத்து ரோலிங்  அதாவது வேறு எதற்காகவோ செலவு செய்துள்ளனர் தமிழக ஆட்சியாளர்கள்.

Government employees strike warning

ஆறு லட்சம் காலி பணியிடங்களை நிரப்பி அரசு ஊழியர்களின் பணிச் சுமையை குறைக்க வேண்டும், சரண்டர், பென்ஷன் திட்டம், அகவிலைப்படி போன்ற முக்கியமான பத்து கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை ஒரு நாள் 69 துறைகளில் பணி செய்யும் அரசு ஊழியர்களும்  அடையாள வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.

அரசு ஊழியர்களின் போராட்டத்தை மதித்து கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் ஏப்ரல் முதல் வாரத்தில் செயற்குழுவைக் கூட்டி, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை ஒன்றிணைத்து தொடர் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடுவோம்.  இதனால் அரசு அலுவலகங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்படும்.  அதனால் அரசு திட்டங்களை செயல்படுத்த முடியாமல் போகலாம். அரசு பெரிய நெருக்கடிகளை சந்திக்க நேரிடும்” என்று எச்சரிக்கிறார் அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்ச்செல்வி.

சட்டமன்றம் நடந்துகொண்டிருக்கும் நிலையில் அரசு ஊழியர்களின் போராட்ட அறிவிப்பு திமுக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

வணங்காமுடி

ராகுல் விவகாரம்: எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

ராகுல் காந்தி விவகாரம்: கருப்பு சட்டையுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்

+1
2
+1
8
+1
1
+1
15
+1
8
+1
5
+1
12

19 thoughts on “அரசு அலுவலகங்கள் மூடப்படும்: அரசு ஊழியர் சங்கத்தின் போராட்ட எச்சரிக்கை!

  1. அரசு வேலை கிடைக்கிற வரை க்கும் எல்லாரும் தர்மனுக்கு தம்பி போலதான் பேசுவீர்கள்.

  2. அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் ஐந்து வகுப்புகளுக்கும் ஒரே ஆசிரியர் அல்லது இரண்டு ஆசிரியர்களால் பாடம் கற்பிக்கப்படுகிறது.இதனால் வகுப்பிற்கு ஒரிரு மாணவர்கள் என்றாலும் அனைத்து வகுப்பிற்கும் அனைத்து பாடங்களையும் நடத்தி அவர்களை கற்பிக்க வைப்பது என்பது எவ்வளவு கஷ்டம் என்பதை ஆசிரியராக இருந்தால் மட்டுமே உணரமுடியும் ஏனெனில் ஆசிரியரும் மாணவராக இருந்தவர்தான்.ஐந்தாவது படிக்கும் ஒரு மாணவர் உயிரெழுத்துக்களை எழுத முடியாமல் இருப்பதை தெரிந்தும் நேரமின்மை மற்றும் வேலைப்பளு இவற்றினாலும் இன்றைய சூழலில் மாணவர்களை கண்டிக்கவோ தண்டிக்கவோ முடியாத நிலையில் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர் .நிலைமை இப்படி இருக்க எப்படி தெரிந்தே அரசு பள்ளிகளில் தமது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பார்கள்?

  3. நன்றி…அதேபோல அனைவரும் உண்மையானசெய்தியைமட்டும் சொல்லி லஞ்சம் கொடுக்காமல் இருப்போம்…..லஞ்சம்வாங்கவைப்பதே நம்மைப்போன்ற சுயநலவாதிகள்தானே…..லஞ்சம்வாங்குபவர்களுக்கு தண்டனை வழங்குவதுபோல….லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் தண்டனை வழங்கவேண்டும்…..இது எனது கருத்து….

  4. என்ன பூச்சாண்டியா?
    பல லட்சம் இளைஞர்கள் படித்த பட்டதாரிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருக்கின்றார்கள் அவர்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கலாம்

    1. இவர்களின் ஓய்வு வயதை 55 ஆக குறைக்க வேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும்.

    2. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுக்கள் அரசு துரையில் உள்ள காலிபணியிடங்களை நிரப்புங்கள் என்கிறோம்

  5. Take oath not to takebribe from public for duty for which u r paid well. Please see the rural poor agri labour striving for. meager wage that is not certain.

  6. அரசு ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் அலுவலக பணி துவங்கும் முன் அனைவரும் எழுந்து உறுதிமொழி எடுத்து கொள்ள வேண்டும். லஞ்சம் வாங்க மாட்டோம். தங்களின் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைப்போம். அரசு மருத்துமனையில் மருத்துவம் பார்ப்போம். உறுதிமொழி எடுங்க.

  7. அரசு ஊழியர்களிடமிருந்து 19 மாத டி.ஏ. சரண்டர் ஆகியவற்றை மிச்சப்படுத்தலாம் பணத்தை எந்த நோக்கத்திற்கு பயன் யட்டது

  8. அரசு ஊழியர்களின் சம்பளத்தை பாதியாக குறைத்து, செய்யும் வேலைக்கு லஞ்சமாக பொது மக்களிடம் வாங்கிக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும்.

    1. அடநாயே அரசு ஊழியர்களுக்கு தரவேண்டியது தான் நான் கேக்குறாங்க புதிதாக ஒன்றும் கேட்கவில்லை அரசு ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டியது தட்டிப் பறித்து கொள்கிறார்கள்

  9. அரசு ஊழியர்கள் போராட்டம் பண்ணாங்கன்னா வேலை விட்டு நீக்கவும் இன்ஜினியரிங் படித்த வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரிக்கு வேலையை வழங்கவும்…. கல்வி கடன் வாங்கிய மாணவர்களுக்கு அவ் வேலையை வழங்கிடவும் …

  10. அரசு ஊழியர்கள் போராட்டம் பண்ணாங்கன்னா வேலை விட்டு நீக்கவும் இன்ஜினியரிங் படித்த வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரிக்கு வேலையை வழங்கவும்….

      1. Job ku vanthu paaru ka appothan enka kastam unkalukku puriyum.munne maathiri ippo govt velai paarkirathu onnum easy illa.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *