அரசு மருத்துவர் மீது கத்திக்குத்து! அதிர்ச்சி சம்பவம்!
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று (நவம்பர் 13) மருத்துவரை குத்திவிட்டு தப்ப முயன்ற சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று காலை பணியில் இருந்த மருத்துவர் பாலாஜியை, விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்றுள்ளார்.
அப்போது அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். படுகாயமடைந்த மருத்துவர் பாலாஜி அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அங்கு நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷின் தாயார் கிண்டி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் மருத்துவமனைக்கு தனது 3 நண்பர்களுடன் வந்த விக்னேஷ், தாயாருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் பாலாஜியை சந்திக்க சென்ற போது, அவரை திடீரென கத்தியால் குத்தி விட்டு தப்ப முயன்றுள்ளார்.
அப்போது அங்கிருந்தவர்களால் பிடிக்கப்பட்ட விக்னேஷ் மற்றும் அவரது 3 மூன்று நண்பர்களையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தனது தாயாருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாததால் விக்னேஷ் மருத்துவரை கத்தியால் குத்தியதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
விஜய்சேதுபதி மகனின் ‘பீனிக்ஸ்’ : ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!
‘எப்போ பார்த்தாலும் உறங்கிட்டே இருக்குது’- எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கியவருக்கு நஷ்ட ஈடு 2.59 லட்சம்